உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளிகளில் பழுதான கட்டடங்கள் செயலியில் விபரம்  பதிவேற்றம்

பள்ளிகளில் பழுதான கட்டடங்கள் செயலியில் விபரம்  பதிவேற்றம்

உடுமலை- அரசுப்பள்ளிகளில் உள்ள, பழுதான கட்டடங்கள் குறித்த விபரங்கள் பட்டியலிடப்பட்டு, பள்ளிக்கல்வித்துறை செயலியில், பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.ஒவ்வொரு ஆண்டும், அரசுப்பள்ளிகளுக்கு பராமரிப்பு செலவினங்களுக்கு நிதி வழங்குவதோடு, கூடுதல் வகுப்பறை, கழிப்பிடம், சுற்றுச்சுவர் கட்ட மத்திய, மாநில அரசுகள் வாயிலாக நிதி ஒதுக்கப்படுகிறது.வரும், 2024 - 25ம் கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், அதற்கான செலவினங்களை பட்டியலிட ஏதுவாக, தற்போது பள்ளிகளில் உள்ள பழுதான கட்டடங்கள், இடித்து அகற்றப்பட வேண்டியவை குறித்த விபரங்களை, தலைமை ஆசிரியர்கள் பட்டியலிட வேண்டும்.பள்ளிக்கல்வித்துறையின் செயலியில், அந்த விபரங்களை பதிவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வகையில், மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் அதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: தலைமை ஆசிரியர்கள் வழங்கிய விபரங்களைக்கொண்டு, இடிக்கப்பட வேண்டிய கட்டடங்களின் உறுதித்தன்மை, ஆயுட்காலம் குறித்து வல்லுநர் குழு ஆய்வு நடத்தப்படும்.அதன் பின் கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டு, புதிய பணி குறித்து முடிவெடுக்கப்படும். உறுதித்தன்மையுடன் கட்டடங்கள் இருந்தால், தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க ஒப்புதல் வழங்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை