உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகர்ப்புற மேம்பாட்டு வாரிய இயக்குனர் ஆய்வு

நகர்ப்புற மேம்பாட்டு வாரிய இயக்குனர் ஆய்வு

-- நமது நிருபர் -தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில், பல்லடம் ஹைடெக் நகரில், 45.75 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், திருப்பூர் தெற்கு தாலுகா பெருந்தொழுவில், 20.55 கோடி மதிப்பீட்டிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.இவ்விரு அடுக்குமாடி குடியிருப்புகளையும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் அன்சுல்மிஸ்ரா ஆய்வு செய்தார். அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வடிகால், தெருவிளக்கு, சாலை, குடிநீர் உள்பட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டார்.மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய வசதிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ