உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சமுதாய நலக்கூடத்தை சீரமைக்க வலியுறுத்தல்

சமுதாய நலக்கூடத்தை சீரமைக்க வலியுறுத்தல்

நெகமம்: காட்டம்பட்டி ஊராட்சி சமுதாய நலக்கூடத்தை சீரமைக்க வேண்டுமென, மக்கள் வலியுறுத்தினர். நெகமம் அருகே, காட்டம்பட்டி ஊராட்சியை சேர்ந்த மக்கள், தங்கள் இல்ல விசேஷங்களுக்கு, சமுதாய நலக்கூடத்தை பயன்படுத்துகின்றனர். இது மட்டுமின்றி இங்கு அரசு சார்ந்த நிகழ்ச்சிகளான மருத்துவ முகாம்கள், உங்களுடன் ஸ்டாலின் முகாம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடக்கிறது. தற்போது, இந்த சமுதாய நலக்கூட கட்டடத்தில் ஆங்காங்கே விரிசல் விட்டும், மேற்கூரையின் கான்கிரீட் பூச்சுகள் சேதமடைந்தும் காணப்படுகிறது. விழா நடக்கும் சமயங்களில், இந்தக் கட்டடத்தில் அச்சத்துடன் அமர்ந்திருக்கின்றனர். இதே போன்று இந்த சமுதாயக்கூட வளாகத்தில் பல மாதங்களாக கேட் இல்லாமல் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. எனவே, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், சமுதாயக் கூடத்தின் சேதமடைந்த பகுதியை சீரமைத்து, இந்த வளாகத்தின் முன் பகுதியில் கேட் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை