உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உருகாதேஸ்வரி அம்மன் கோயில் ஆண்டு விழா

உருகாதேஸ்வரி அம்மன் கோயில் ஆண்டு விழா

அன்னுார்; உருகாதேஸ்வரி அம்மன் கோயில் ஆண்டு விழாவில், திரளானோர் பங்கேற்றனர். அன்னுார் அருகே மசக்கவுண்டன் செட்டிபாளையத்தில், பிரசித்தி பெற்ற உம்மத்தூர் உருகாதேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நான்காம் ஆண்டு கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் நடந்தது. காலையில் கணபதி ஹோமம் நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு, பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேக பூஜையும், கலச தீர்த்தம் ஊற்றுதலும் நடந்தது. மதியம், அம்மனுக்கு அலங்கார பூஜை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். மகா தீபாராதனையும், அன்னதானமும் நடைபெற்றது. கோவை, காரமடை, அன்னுார் பகுதி பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை