உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உழவர் சந்தையை பயன்படுத்துங்க! விவசாயிகள் பயன்பெற அழைப்பு

உழவர் சந்தையை பயன்படுத்துங்க! விவசாயிகள் பயன்பெற அழைப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், கடந்த, 2000ம் ஆண்டு உழவர் சந்தை துவங்கப்பட்டது. விவசாயிகள் காய்கறிகளை நேரிடையாக சந்தைப்படுத்தும் வகையில், உழவர் சந்தையில், 80 கடைகள் உள்ளன. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான் பேட்டை, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதியில் அடையாள அட்டை பெற்றுள்ள விவசாயிகளில், தினமும் 60 முதல், 70 பேர் வரை உழவர் சந்தையில் பங்கேற்கின்றனர். சராசரியாக, 14 முதல், 16 டன் காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. மாதந்தோறும், 400 டன்னுக்கும் அதிகமாக காய்கறி வரத்து உள்ளது. இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் நடக்கிறது. காய்கறிகள் தரமாகவும், விலை குறைவாகவும், விவசாயிகள் நேரிடையாக விற்பனை செய்வதால், நுகர்வோர்கள் உழவர் சந்தையில் காய்கறி வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், உழவர் சந்தையின், 25ம் ஆண்டு வெள்ளி விழா நேற்று நடந்தது. வேளாண் வணிகம் துணை இயக்குனர் மீனாம்பிகை தலைமை வகித்து பேசுகையில்,''உழவர் சந்தையில் போதுமான வசதிகள் உள்ளன. விவசாயிகள், சந்தையில் உள்ள வசதிகள் குறித்தும், அரசின் திட்டங்களை தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்து விவசாயிகள் பயன்பெற வேண்டும்,'' என்றார். விழாவில், விவசாயிகளை அதிகாரிகள் கவுரவித்தனர்.வேளாண் அலுவலர்கள் கில்டா, சூர்யா, உழவர் சந்தை நிர்வாக அலுவலர் வெங்கடேசன், உதவி நிர்வாக அலுவலர்கள் வீரேஸ்வரன், பாண்டியராஜன், வேளாண் துறை உதவி நிர்வாக அலுவலர் குமார் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ