ஐயப்ப சுவாமிக்கு உத்தர நட்சத்திர பூஜை
வால்பாறை; வால்பாறையில், ஐயப்ப சுவாமிக்கு புரட்டாசி மாத உத்தர நட்சத்திரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி கோவிலில், புரட்டாசி மாதம் உத்தர நட்சத்திரத்தையொட்டி நேற்று காலை, 5:00 மணிக்கு சிறப்பு யாக பூஜையும், அதனை தொடர்ந்து அபிேஷக பூஜை நடந்தன. அதன்பின், சிறப்பு அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். இதே போல், வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவிலிலும் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.