மேலும் செய்திகள்
கோவில் நிலம் ' கூறு ' ; லஞ்சம் ' தாறுமாறு '
17-Sep-2024
கோவை : உப்பிலிபாளையம் பகுதியில், 'பிரிகாஸ்ட்' முறையில் கான்கிரீட் பாக்ஸ் மழை நீர் வடிகால் பதிக்கும் பணியை, நேற்றிரவு கலெக்டர் கிராந்திகுமார் பார்வையிட்டார்.அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை நகர் பகுதியில் பெய்து வரும் மழையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்; எந்தெந்த பகுதிகளில் தேங்குகிறது என, தென்மேற்கு பருவ மழை சமயத்தில் ஆய்வு செய்து, சுரங்கப்பாதைக்கு தண்ணீர் வடிந்து செல்லும் தளத்தில், கிரிலுடன் வடிகால் அமைத்தோம். அதன் மூலம் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவது குறைந்தது. 35 மி.மீ., வரை மழை பெய்தால், நாம் ஏற்படுத்திய நடவடிக்கைகள் மூலம் தீர்வு கிடைத்திருக்கிறது. லங்கா கார்னர் உள்ளிட்ட இடங்களில், நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது.80 மி.மீ., மழை பெய்த சமயத்தில், அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்துக்கு கீழும், சிவானந்தா காலனி ரயில்வே பாலத்திலும் தண்ணீர் தேங்கியது. அதற்கு தீர்வு காண, 'பிரிகாஸ்ட்' தொழில்நுட்பத்தில் கான்கிரீட் பாக்ஸ் வடிகால் அமைக்கப்படுகிறது. ஒரு வாரத்துக்குள் இப்பணி முடியும். சிவானந்தா காலனியில் 'கிராவிட்டி'யில் தண்ணீர் சென்று விடும். கூடுதல் மோட்டார்கள் பொருத்த இருக்கிறோம். அடுத்த மழைக்கு எந்த பிரச்னையும் வராத அளவுக்கு, பணிகள் செய்யப்படுகின்றன. இவ்வாறு, கலெக்டர் கூறினார்.
கலெக்டர் கூறுகையில், ''கோவை மாநகராட்சி பகுதியில், 76 இடங்கள், புறநகரில் 66 இடங்களில் முகாம்கள் தயாராக உள்ளன. வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தாலும் இரண்டு மணி நேரத்தில் வெளியேறி விடும். முகாம்களில் மக்களுக்கு உணவு வழங்கவும், தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். குளங்கள், நொய்யல் வழித்தடங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,'' என்றார்.
17-Sep-2024