100 சதவீத மானியத்தில் காய்கறி விதை தொகுப்பு
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், 100 சதவீத மானியத்தில் வீட்டு தோட்டம் அமைக்க, ஆறு வகை காய்கறி விதைகள் மற்றும், மூன்று வகையான பழச்செடிகள் தொகுப்பு வழங்கப்படுகிறது.பொள்ளாச்சி தெற்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சவுமியா கூறியதாவது:முதல்வரால் துவக்கி வைக்கப்பட்ட ஊட்டச்சத்து வேளாண்மை இயக்ககம் வாயிலாக, பயனாளிகளுக்கு வீடுகளில் தோட்டம் அமைத்து காய்கறிகள், பழங்கள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் அனைத்து பொதுமக்களுக்கு, 60 ரூபாய் மதிப்புள்ள தக்காளி, கத்திரி, மிளகாய், வெண்டை, கொத்தவரை மற்றும் கீரை விதைகள் அடங்கிய தொகுப்பு, 100 ரூபாய் மதிப்புள்ள எலுமிச்சை, கொய்யா, பப்பாளி செடிகள் அடங்கிய தொகுப்பும், 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் பயன்பெற, httpes://tnhorticulture.tn.gov.in/kit என்ற இணையதளத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் அல்லது 'க்யூஆர் கோடு' வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம்.வீட்டு தோட்டம் அமைப்பதன் வாயிலாக, வீட்டு சமையலுக்கு தேவையான காய்கறிகளையும், ஆரோக்கியமான பழங்களையும் வீட்டிலேயே விளைவித்து பயன்பெறலாம்.இவ்வாறு, கூறினார்.