மேலும் செய்திகள்
திருப்பதி மாடல் தரிசனம் சபரிமலையில் துவக்கம்
15-Mar-2025
கோவை; மருதமலை, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் ஏப்., 4 முதல், 6 வரை மலை மீது, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல, பக்தர்களுக்கு அனுமதியில்லை. மருதமலை, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும், 4ம் தேதி திருக்குடநன்னீராட்டு விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு, ஏப்.,1 மாலை 5:00 மணிக்கு மேல், திருக்கோவிலில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார சன்னதிகளில், சக்தி கலசங்களை யாகசாலையில் வைத்து பூஜை செய்கின்றனர். பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.மீண்டும் ஏப்.,4ல், திருக்குட நன்னீராட்டு விழா முடிந்ததும், வழக்கமான முறையில் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். வரும் ஏப்., 4 முதல், 6 வரை மலை மீது, வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை. பக்தர்கள் படி வழியாகவும், திருக்கோவில் பஸ் வாயிலாகவும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.இவ்வாறு, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
15-Mar-2025