உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  உண்ணி சொட்டு மருந்து வழங்க கால்நடைத்துறை செயல்விளக்கம்

 உண்ணி சொட்டு மருந்து வழங்க கால்நடைத்துறை செயல்விளக்கம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமில், உண்ணி சொட்டு மருந்து முதுகில் விடுவது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பொள்ளாச்சி அருகே, கோமங்கலம்புதுார் கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம், கூளநாயக்கன்பட்டி, கள்ளிவலசு கிராமங்களில் நடைபெற்றன. இதில், உதவி இயக்குனர் டாக்டர் சக்ளாபாபு முன்னிலை வகித்தார். டாக்டர் கோவிந்தராஜ், கால்நடை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், உதவியாளர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.சொக்கனுார் கால்நடை மருந்தகம் சார்பில் நடந்த முகாமில், மண்டல இணை இயக்குனர் டாக்டர் மகாலிங்கம், உதவி இயக்குனர் டாக்டர் சுரேஷ், கால்நடை புலனாய்வு பிரிவு டாக்டர்கள் ஜோதி, சுமையா உள்ளிட்டோர் பேசினர். அதில், மலட்டுத்தன்மை நீக்க சிகிச்சை, கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், சுண்டுவாத அறுவை சிகிச்சை, ஆண்மை நீக்கம், கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், கோழிகளுக்கு தடுப்பூசி, தாது உப்பு வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், தீவனப்பயிர் வளர்ப்பு, பறவை காய்ச்சல், விவசாய கடன் அட்டை, கால்நடை காப்பீடு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, மாடுகளுக்குஉண்ணி சொட்டு மருந்து முதுகில் விடுவது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், எவ்வாறு மருந்து விட வேண்டும் என விவசாயிகளுக்கு டாக்டர்கள் விளக்கம் அளித்தனர்.சிறந்த கிடாரி கன்றுகளுக்கும், முன்னோடி கால்நடை விவசாயிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ