மேலும் செய்திகள்
'வனப்பகுதியில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை'
15-Oct-2025
மேட்டுப்பாளையம்: துணை ஜனாதிபதி இன்று காரமடை அருகே ஒண்ணிப்பாளையம் வர உள்ளார். இதையடுத்து, காரமடையில் உள்ள கேரளா எல்லையான முள்ளி, கோபனாரியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து போலீசார், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கேரளா மாநிலம் வயநாடு, கண்ணூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் உள்ளது. கேரளா வனப்பகுதியில் உள்ள மாவோயிஸ்ட்டுகள், மாநில எல்லையோரங்களில் உள்ள வனப்பகுதிகள் வழியாக தமிழகத்துக்குள் நுழைய வாய்ப்புள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள கேரளா மாநில எல்லை பகுதிகளில் பல மாதங்களாக போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் இன்று காரமடை ஒண்ணிப்பாளையத்தில் உள்ள எல்லை கருப்பராயன் கோவிலுக்கு வர உள்ளார். இதையடுத்து காரமடை அருகே கேரளா மாநில எல்லை பகுதியான முள்ளி மற்றும் கோபனாரி வனப்பகுதிகளில் கியூ பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ளதா என தீவிரமாக ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதி முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், முள்ளி, கோபனாரி செக்போஸ்ட்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள அத்திக்கடவு, பில்லூர், மேல்பாவி, குண்டூர், ஆலங்கண்டி, ஆலங்கட்டிபுதூர், காலன்புதூர், செங்குட்டை, குட்டை புதூர், பட்டி சாலை உள்ளிட்ட பல்வேறு வனப்பகுதிகளில் போலீசார் வனத்துறையினருடன் இணைந்து கண்காணித்து வருகிறோம்' என்றனர்.--
15-Oct-2025