விஜய் பிறந்த நாள் விழா; 30 குழந்தைகளுக்கு மோதிரம்
கோவை; கோவை அரசு மருத்துவமனையில், பிறந்த 30 குழந்தைகளுக்கு, த.வெ.க., சார்பில், ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் பிறந்தநாள், நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. கணபதி, சரவணம்பட்டி, துடியலுார், கவுண்டம்பாளையம், காந்திபுரம் உட்பட பல பகுதிகளில், அன்னதானம், ரத்ததானம் மற்றும் மருத்துவ முகாம், குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கி, கொண்டாடப்பட்டது.கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாபு தலைமையில், மாவட்ட துணை செயலாளர் மோகனப்பிரியா ஏற்பாட்டில், மாவட்ட பெண் நிர்வாகிகள் 15 பேர், உடல் உறுப்பு தானத்துக்கு, அரசு மருத்துவமனையில் பதிவு செய்தனர்.அரசு மருத்துவமனையில் பிறந்த 30 குழந்தைகளுக்கு, நேற்று, கோவை மாநகர மாவட்ட செயலாளர் சம்பத்குமார் தலைமையில், குழந்தைகளுக்கு, ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. மாவட்ட இணை செயலாளர் மைக்கேல் குணசிங், நிர்வாகிகள் உண்ணி, ராம்குமார், மது, அருண் உட்பட பலர் பங்கேற்றனர்.