உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  உலக அளவில் 352ம் இடம் வி.ஐ.டி., பல்கலை சாதனை

 உலக அளவில் 352ம் இடம் வி.ஐ.டி., பல்கலை சாதனை

சென்னை: உலக பல்கலைகளின் தர வரிசைப் பட்டியலில், நிலைத்தன்மை பிரிவில், வேலுார் வி.ஐ.டி., பல்கலை, 352ம் இடம், இந்திய அளவில் 7ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இது குறித்து, வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன் கூறியதாவது: நடப்பு ஆண்டிற்கான உலக பல்கலை நிலைத்தன்மை பிரிவுக்கான தர வரிசைப் பட்டியலை, க்யூ.எஸ்., என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், அறிவு பரிமாற்றம், வேலை வாய்ப்பு, சுகாதாரம் உட்பட எட்டு அளவுகோலில், ஒட்டு மொத்தமாக 74.9 மதிப்பெண்கள் பெற்று, வி.ஐ.டி., பல்கலை, உலகளவில் 352ம் இடம், இந்திய அளவில் 7ம் இடம் பிடித்துள்ளது. மேலும், சமுதாய தாக்கம், சுற்றுச்சூழல் தாக்கம், நிர்வாகம் ஆகிய மூன்று பிரிவுகளில், சிறப்பான மதிப்பெண்களை பெற்று, தர வரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக சுற்றுச்சூழல் தாக்கத்தில், 78.1 மதிப்பெண்கள் பெற்று, உலகளவில் பல்கலை தர வரிசையில் 194ம் இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில், வி.ஐ.டி., பல்கலை, க்யூ.எஸ்., நிலைத்தன்மை பிரிவில், உலகளவில் 396ம் இடம் பிடித்திருந்த நிலையில், தற்போது, 352ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. நடப்பு ஆண்டு பதிப்பில் 106 இடங்களை சேர்ந்த, 2,000 பல்கலைகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. உலகின் முதல் 400 இடங்களுக்குள், இதுவரை இல்லாத உயர்ந்த இடங்களை வி.ஐ.டி., பல்கலை பெற்றுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை