| ADDED : நவ 21, 2025 07:02 AM
கோவை: வரும் நவ., 22, 23 ஆகிய இரு தினங்களில் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் உதவி மையங்கள் அமைத்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இது குறித்து கலெக்டர் பவன்குமார் அறிக்கை: தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி தகுதியுடைய வாக்காளர்கள் விடுபடக்கூடாது என்பதற்காக தூய்மையான வாக்காளர் பட்டியலை தயார் செய்யும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமுறை தற்போது நடந்து வருகிறது. கடந்த நவ., 4 முதல் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. வரும் டிச., 4- அன்று நிறைவடைகிறது. கணக்கீட்டு படிவத்தினை அனைத்து வாக்காளர்களுக்கு நேரடியாக வழங்கி அப்படிவங்களை திரும்ப பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்குள்ள சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையிலும் மற்றும் வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விபரங்களை கண்டறிவதில் வாக்காளர்களுக்கு உதவி செய்யப்படுகிறது. அதற்காக வரும் 22, 23 ஆகிய இரு தினங்களில் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் உதவி மையங்கள் அமைத்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அப்போது அனைத்து ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களும் தொடர்புடைய ஓட்டுச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பணியில் இருப்பர். இப்பணிக்கு பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் தன்னார்வலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.