உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாக்காளர் சரிபார்ப்பு; எம்.எல்.ஏ.,க்கள் ஆய்வு

வாக்காளர் சரிபார்ப்பு; எம்.எல்.ஏ.,க்கள் ஆய்வு

கோவை; கோவையில் நடந்த வாக்காளர் சரிபார்ப்பு முகாமில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஆய்வு செய்தனர்.கடந்த 16, 17, 23 மற்றும் நேற்று என நான்கு நாட்கள், தமிழகம் முழுவதும், 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர் சரிபார்ப்பு முகாம் நடந்தது.சனி, ஞாயிறு நாட்களில், சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டு நடந்தன. இந்த முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கான படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்து பெறப்பட்டன.இந்த முகாம்களில், அரசியல் கட்சியினர் பங்கேற்று பொதுமக்களுக்கு உதவினர். சிறப்பு முகாம் பணிகளையும் ஆய்வு செய்தனர். பீளமேடு, ஆவாரம்பாளையம் பி.எஸ்.ஜி., தொடக்கப்பள்ளியில் நடந்த முகாமில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,கள் அம்மன் அர்ச்சுனன், ஜெயராம் ஆகியோர் பணிகளை ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை