உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உலக சாதனை பதிவுக்காக வியாக்த பச்சிமோத்தாசனம்

உலக சாதனை பதிவுக்காக வியாக்த பச்சிமோத்தாசனம்

ஆனைமலை,; ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமத்தில், மாணவர்கள் ஒன்றிணைந்து, தொடர்ந்து, 10 நிமிடம் 'வியாக்த பச்சிமோத்தாசனம்' என்ற ஆசனத்தை செய்து அசத்தினர்.ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமத்தில், 'குளோபல் வேல்டு ரெக்கார்டு' அமைப்பு வாயிலாக உலக சாதனைக்கான யோகாசனம் நடத்தப்பட்டது. இதில், கஸ்துாரிபாய் காந்தி இல்ல விடுதியில் தங்கி பயின்று வரும், ஆனைமலை அரசு மேல்நிலைப்பள்ளி, வி.ஆர்.டி., அரசு மேல்நிலைப்பள்ளி, குப்பிச்சிப்புதுார் அரசு ஆரம்பப் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.அதில் 'வியாக்த பச்சிமோத்தாசனம்' என்ற ஆசனத்தை, 10 நிமிடங்கள் தொடர்ந்து செய்து அசத்தினர்.தொடர்ந்து, உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.'குளோபல் வேல்டு ரெக்கார்டு' அமைப்பு மேலாளர் ராஜேஷ், ஆசிரம நிர்வாக அறங்காவலர் ரங்கநாதன் ஆகியோர் மாணவர்களுக்கு யோகாசன சாதனைக்கான விருது மற்றும் சான்றிதழ் வழங்கினர்.யோகா பயிற்சியால், உடலும், மனமும் ஒருநிலைப்படும். மாணவர்கள் தினமும் யோகா பயிற்சி மேற்கொள்வதால், மனம் புத்துணர்ச்சி அடையும். கல்வியிலும் அதிக நாட்டம் செலுத்த முடியும் என, தெரிவிக்கப்பட்டது.யோகா ஆசிரியர் கிருஷ்ணராஜ், தனியார் நிறுவன உரிமையாளர் கார்த்திக் சின்ராஜ், ஆசிரம விடுதிக் காப்பாளர் சர்வோதயா, ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை