உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாக்கரூ புதிய அறிமுகம்; பார்வையாளர்கள் வியப்பு

வாக்கரூ புதிய அறிமுகம்; பார்வையாளர்கள் வியப்பு

கோவை; காலணி உலகில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள வாக்கரூ நிறுவனம், தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய காலணி மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த மாடல்கள், கோவை சரவணம்பட்டியிலுள்ள குளோபஸ் அரங்கத்தில், நேற்று காட்சிப்படுத்தப்பட்டன. பாதங்களுக்கு ஏற்ற வசதி மற்றும் ஸ்டைல் கொண்ட, வாக்கரூ பிளஸ் மற்றும் வாக்கரூ பிளஸ் அர்பனோஸ், இளைஞர்களை ஈர்க்கும் நவீன மாடலான வாக்கரூ பிளிப் - ப்ளாப்ஸ், அதிநவீன வாக்கரூ ஸ்போர்ட்ஸ் ஆகியவை, கோடை பருவத்துக்கான புதிய வரவுகளாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.'வாக்கரூ' நிர்வாக இயக்குனர் நவ்ஷாத் கூறுகையில், ''தமிழக மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப, ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்கள் பிராண்ட் துாதராக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இணைந்திருப்பதன் வாயிலாக, இளைஞர்களை எங்களின் ஸ்டைலான மற்றும் புதுமையான காலணிகளை, வாங்கும் ஆர்வத்தை துாண்டும் என நம்புகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ