உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கத்திரி வெயில் துவங்கும் முன்பே அணைகளில் நீர் இருப்பு சரிவு

கத்திரி வெயில் துவங்கும் முன்பே அணைகளில் நீர் இருப்பு சரிவு

சென்னை:கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்னரே, தமிழக அணைகளில் நீர் இருப்பு, 131 டி.எம்.சி.,யாக குறைந்துள்ளது.தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு, 224 டி.எம்.சி.,யாகும். இதில், மேட்டூர், பவானிசாகர், பரம்பிக்குளம், முல்லைப் பெரியாறு உள்ளிட்ட, 15 அணைகள் அதிகளவு கொள்ளளவு உடையவை. இவற்றின் ஒட்டு மொத்த கொள்ளளவு 198 டி.எம்.சி.,யாகும். மீதமுள்ள அணைகள், ஒரு டி.எம்.சி.,க்கும் குறைவான கொள்ளளவு உடையவை. பல அணைகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ளதால், அவற்றுக்கு ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்கு பருவமழை காலங்களில் நீர்வரத்து கிடைக்கிறது.அணைகளில் இருந்து பாசனம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கு, தொடர்ச்சியாக நீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், அணைகளின் நீர் இருப்பு, 131 டி.எம்.சி.,யாக குறைந்துள்ளது. அதிகபட்சமாக, மேட்டூர் அணையில், 75.3 டி.எம்.சி.,யும், பவானிசாகரில் 13.3 டி.எம்.சி.,யும், பரம்பிக்குளத்தில் 8.05 டி.எம்.சி.,யும் நீர் இருப்பு உள்ளது. கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்னரே, 13 ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. முறையாக துார்வாரப்படாததால், அணைகளில் அறிவிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் குறைந்த அளவே நீர் இருப்பு உள்ளது. தற்போதுள்ள நீரை வைத்து, கோடைக்கால குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை