உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அணைகள் நீர்மட்டம் சரிவு; பாசன விவசாயிகள் கவலை

அணைகள் நீர்மட்டம் சரிவு; பாசன விவசாயிகள் கவலை

வால்பாறை; மழை பெய்யாத நிலையில், பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால், பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.வால்பாறையில் கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்குப்பருவ மழையினால், பி.ஏ.பி., பாசன திட்டத்தில் உள்ள மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, மேல்ஆழியாறு, காடம்பாறை, ஆழியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பின.இதனால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக வால்பாறையில் மழைப்பொழிவு குறைந்ததாலும், மின் உற்பத்திக்காக தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதாலும், பி.ஏ.பி., பாசன திட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.வால்பாறையில் கடும் வறட்சி நிலவும் நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 4.72 அடி சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 9.50 கனஅடி தண்ணீர் மட்டுமே வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 350 கனஅடி தண்ணீர் வீதம், பரம்பிக்குளம் அணைக்கு மின் உற்பத்திக்காக திறந்து விடப்பட்டது.இதே போல், 120 அடி உயரமுள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 91.55 அடியாகவும், 72 அடி கொள்ளவு கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 67.80 அடியாகவும் சரிந்தது. அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை