குடிநீர் குழாய் சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி
கோவை: கோவை, பாலக்காடு ரோடு, கோவைபுதுார் பிரிவில் இருந்து தார் சாலை போடும் பணி நடந்த போது, பில்லுார் குடிநீர் குழாய் உடைந்து சேதமடைந்தது. இதனால், மூன்று நாட்களாக குடிநீர் வெளியேறி, பாலக்காடுரோட்டில் தண்ணீர் வீணாக ஓடியது. அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக, நமது நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து, கோவை மாநகராட்சி அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு நேற்று குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர். இதனால் குடிநீர் வீணாவது தடுக்கப்பட்டது.