உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழைக்கு முன் சீரமைக்கணும்!

மழைக்கு முன் சீரமைக்கணும்!

கார்த்திக், பொள்ளாச்சி: பொள்ளாச்சி - உடுமலை ரோடு மிக மோசமாக உள்ளது. இந்த ரோட்டை சீரமைக்க பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளதால் தினமும் விபத்து ஏற்படுகிறது. கோவை ரோட்டில், சி.டி.சி., மேட்டில் இருந்து, ஆச்சிபட்டி வரை ரோடு மோசமாக உள்ளதால், விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது. மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழை காலம் துவங்கியுள்ளதால் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.ராஜா, வால்பாறை: சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறை நகரில், சாலையோர ஆக்கிரமிப்புகளால், நெடுஞ்சாலைத்துறை ரோடு குறுகி வருகிறது. நெடுஞ்சாலைத்துறை ரோடுகளில் கடந்த பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் உள்ள புதர்செடிகளையும் அகற்ற வேண்டும். எஸ்டேட் தொழிலாளர்களின் நலன் கருதி குண்டும், குழியுமாக உள்ள ரோடுகளை நகராட்சி சார்பில் சீரமைக்க வேண்டும். வால்பாறை நகரில் இருந்து அக்காமலை எஸ்டேட் வரை ரோட்டை விரிவுபடுத்த வேண்டும்.லட்சுமிகாந்த், உடுமலை: மடத்துக்குளம் பகுதியிலிருந்து உடுமலை வரை தேசிய நெடுஞ்சாலை மோசமான நிலையில் உள்ளது. நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல் உள்ளதால், பல இடங்கள் குண்டும், குழியுமாக மாறி விட்டது. நகரப்பகுதியிலும் இந்த ரோடு பரிதாபமாக உள்ளது. மழை காலங்களில் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், கழிவு நீர் ரோட்டில் செல்வதை தடுக்க வடிகால் ஏற்படுத்த வேண்டும்.கனரக வாகனங்கள் அதிகளவு செல்லும் தேசிய நெடுஞ்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். தேவையான இடங்களில் மையத்தடுப்பு, 'ரிப்ளக்டர்' பொருத்த வேண்டும். பல்லடம் ரோட்டை விரிவாக்கம் செய்தால், திருப்பூருக்கு செல்லும் வாகன ஓட்டுநர்கள் பயன்பெறுவர்.சந்தோஷ், கிணத்துக்கடவு: ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் வாகனம் ஓட்டுநர்கள் அனைவருமே சிரமப்படுகின்றனர். மேலும், மழை காலத்தில் ரோட்டில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதுடன், ரோட்டோரத்தில் தேங்கும் மண் மற்றும் கம்பிகளால், வாகன டயர்களில் 'பஞ்சர்' ஏற்படுகிறது. மேலும், ரோட்டிலுள்ள பள்ளத்தில் சிரமத்துடன் செல்வதால் வாகனங்கள் பழுதடைவதுடன், ஓட்டுநர்கள் கீழே விழுகின்றனர். எனவே, கிராமப்புற மற்றும் நெடுஞ்சாலை ரோடுகளை மழைக்கு முன் சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் 'பேட்ச் ஒர்க்' செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ