உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இணையதளம் முடக்கம்; சான்றிதழ் பெற முடியாமல் அவதி

 இணையதளம் முடக்கம்; சான்றிதழ் பெற முடியாமல் அவதி

கோவை: இணையதளம் முடங்குவதால், உரிய நேரத்தில் சான்றிதழ் பெற முடியாமல் மாணவர்கள், பெற்றோர் அவதிக்குள்ளாவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சலுகைகளை பெற சாதி, வருமானம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் வருவாய் துறை மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இச்சான்றிதழ்களை பெற பெரும்பாலும் இ-சேவை மையத்தை பொதுமக்கள் நாடுகின்றனர். இதற்காக இ-டிஸ்ட்ரிக்ட் இணையதளம் செயல்பட்டு வருகிறது. இ-சேவை மையங்கள் மட்டுமின்றி பொதுமக்கள் நேரடியாகவும் இந்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆனால், கடந்த சில தினங்களாக இணையதளம் அடிக்கடி முடங்கி வருகிறது. குறிப்பாக கடந்த சனிக்கிழமை இரவு முதல் இணையதளம் முடங்கியது. இந்நிலையில் பராமரிப்பின் காரணமாக நேற்று மதியம், 12:00 மணி வரை செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று மதியம், 12:00 மணிக்கு பின்னரும் இணையதளம் செயல்படவில்லை. மதியம், 2:00 மணிக்கு பின்னரே இணையதள சேவை துவங்கியது. இதனால், மாணவர்கள், பெற்றோர் சான்றிதழ் பெற முடியாமல் கடும் அவதிக்குள்ளானதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து இதுபோல் இணையதளம் முடங்குவதால் உரிய நேரத்தில் சான்றிதழ் பெற முடியாமல் சலுகைகளை பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்