உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருக்கல்யாண திருவிழா

திருக்கல்யாண திருவிழா

அன்னுார்: ஆத்திகுட்டையில், மாரியம்மன் திருக்கல்யாண உற்சவ திருவிழா துவங்கியது. ஆத்திகுட்டையில் உள்ள பழமையான அத்தித்துறை மாரியம்மன் கோவிலில் 17வது ஆண்டு திருக்கல்யாண திருவிழா கடந்த 22ம் தேதி இரவு விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. 23ம் தேதி திருக்கோவிலில் விருந்து நடைபெற்றது.நேற்று பொங்கல் வைத்தலும், பங்காரு அழகர் பெருமான் கோவில் கருப்பராயன் கோவில் மற்றும் மாகாளியம்மன் கோவிலில் வழிபாடு செய்தலும் நடந்தது. வரும் 28ம் தேதி அம்மன் திருக்கோயிலுக்கு வரும் வைபவம் நடக்கிறது. வரும் 30ம் தேதி இரவு கம்பம் நடப்படுகிறது.ஏப்ரல் 6ம் தேதி இரவு அம்மன் அழைப்பு நடைபெறுகிறது. 7ம் தேதி அதிகாலையில் சக்தி கரகம் எடுத்தல், காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், இதையடுத்து அபிஷேக அலங்கார பூஜையும் நடக்கிறது. மதியம் அக்னி கரகம் எடுத்தல், மாவிளக்கு எடுத்தல் வைபவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை