கல்லுாரி மாணவியருக்கான பளுதுாக்கும் போட்டி
கோவை: பாரதியார் பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான மகளிருக்கான பளுதுாக்கும் போட்டி, நிர்மலா மகளிர் கல்லுாரியில் நடந்தது. இதில், 14 கல்லுாரிகளில் இருந்து 43 பேர் பங்கேற்றனர். கல்லுாரி செயலர் குழந்தை தெரஸ், முதல்வர் மேரி பெபியோலா, பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் (பொ) அண்ணாதுரை, ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்து பேசினர். 48 கிலோ எடை பிரிவில், பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரியை சேர்ந்த அபித்ராஜ், ஈரோடு கலை அறிவியல் கல்லுாரி ஜீவிதா, பெருந்துறை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி மதுமிதா முதல் மூன்று இடங்கள் பிடித்தனர். 53 கிலோ எடை பிரிவில், முத்துார் கே.எம்.சி., கல்லுாரி போஷிகா, ஈரோடு கலை அறிவியல் கல்லுாரி இலக்கியா, திருப்பூர் ஜோசப் மகளிர் கல்லுாரி சிவசங்கரி முதல் மூன்று இடங்கள் பிடித்தனர். 58 கிலோ எடை பிரிவில், ஈரோடு கலை அறிவியல் கல்லுாரி கனிகா ஸ்ரீ, நிர்மலா மகளிர் கல்லுாரி கவிதா, பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லுாரி கிருத்திகா ஆகியோர் முதல் மூன்று இடங்கள் பிடித்தனர். 63 கிலோ எடை பிரிவில், நிர்மலா கல்லுாரி பவித்ரா, ஈரோடு கலை, அறிவியல் கல்லுாரி ஹரிணி, ஜோசப் மகளிர் கல்லுாரி கீர்த்தனா ஆகியோர் முதல் மூன்று இடங்கள் பிடித்தனர். 69 கிலோ எடை பிரிவில், நிர்மலா கல்லுாரி பரணி பிரியா, பி.எஸ்.ஜி., கலை, அறிவியல் கல்லுாரி இளவரசி ஆகியோர் முதல் இரண்டு இடங்கள் பிடித்தனர். போட்டி ஏற்பாடுகளை, நிர்மலா கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் ஸ்ரீமதி மேற்கொண்டார்.