மேலும் செய்திகள்
அ.தி.மு.க., நலத்திட்ட உதவி
25-Dec-2024
கோவை: கோவை, ஆர்.எஸ்.புரம், சாஸ்திரி மைதானத்தில், கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையம் சார்பில், கண்காட்சி மற்றும் விற்பனை நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கைவினைஞர்களுக்கு கிராம உத்யோக் விகாஸ் திட்டத்தின் கீழ், கே.வி.ஐ.சி., தலைவர் மனோஜ்குமார் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.நிகழ்ச்சியில், மண் பானை முனைவதற்கான இயந்திரம், பிளம்பர்களுக்கான உபகரணங்கள், தேனீ பெட்டிகள், புளி பதனிடும் இயந்திரம், பனைத்தொழிலாளர்களுக்கான உபகரணங்கள் என, 200 பயனாளிகளுக்கு, ரூ.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கே.வி.ஐ.சி., பெங்களூரு தலைமைச் செயல் அதிகாரி மதன் குமார் ரெட்டி, மாநில இயக்குநர் சுரேஷ், துணை இயக்குநர் வாசிராஜன், தமிழ்நாடு கதர் வாரிய கோவை உதவி இயக்குநர் ராஜேஸ்வரி, மாவட்ட தொழில்மைய மேலாளர் சண்முகம் சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
25-Dec-2024