உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீச்சல் குளம் கட்டும்போது கவனிக்க வேண்டியதென்ன?

நீச்சல் குளம் கட்டும்போது கவனிக்க வேண்டியதென்ன?

நாம் கட்டும் வீட்டில், எப்படியெல்லாம் பாதுகாப்பான முறையில் நீச்சல் குளம் அமைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து, கோயமுத்தூர் மாவட்ட அனைத்து பொறியாளர்கள் சங்கம்( காட்சியா)இணை மக்கள் தொடர்பு அலுவலர் திருமூர்த்தி கூறியதாவது:l வீடு கட்டும்போது, நீச்சல் குளம் அமைப்பதாக இருந்தால், நிலமட்டத்திலா அல்லது மொட்டைமாடியிலா என்பதை முடிவெடுக்க வேண்டும். அதற்கேற்ப திட்டமிடுதல் அவசியம்.l நிலத்தில் அமைப்பதாக இருந்தால், நிலமட்டத்திலிருந்து சற்று உயரமாக அமைத்தல் அவசியம். அப்போதுதான் வெளிநீர் உட்புகாது. செவ்வக வடிவில் நீச்சல் குளம் அமைப்பது அதிக பயனைத்தரும்.l ஆர்ச் நீச்சல்குளம் அமைத்தால், அழகாக இருக்கும். நீச்சல் குளம் கட்டும்போது ஆர். சி .சி., கான்கிரீட்டால் சுவர் மற்றும் தரை தளம் அமைப்பது அவசியம். l ஆர்.சி.சி.சுவர் அமைக்கும் போது, நீச்சல் குளத்தின் நீரின் கொள்ளளவை பொருத்து, சுவற்றின் கனத்தை அதிகரிக்க வேண்டும்.l தரைதளம் அமைக்கும்போது, இறங்கும் இடம் ஆழம் குறைவாகவும், ஏறுமிடம் ஆழம் சற்று அதிகமாகவும் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கென்று நீச்சல் குளம் கட்டும்போது, ஆழம் குறைவாக அமைக்க வேண்டும்.l சுவர் கட்டியபிறகு வாட்டர் ப்ரூபிங் செய்தபிறகே டைல்ஸ் ஒட்ட வேண்டும். தற்பொழுது டைல்ஸ்க்குப் பதிலாக, அதற்கென பிரத்யேக பி.வி.சி., ஷீட்டும் கிடைக்கிறது. அதை ஒட்டியும் பயன்படுத்தலாம்.l பொதுவாக நீல நிறம் அல்லது பச்சை நிறம் உடைய டைல்ஸ் பயன்படுத்தவேண்டும். அதேபோல் நீச்சல்குளத்தைச் சுற்றி, நடைபாதை அமைக்கும்போது (டெக் ஏரியா) வழுக்காமல் இருக்கும் டைல்ஸ் கொண்டு ஒட்டவேண்டும். நடைபாதையை ஒட்டி புல்தரை அமைத்து அழகுபடுத்தலாம்.l வீட்டின் மேற்பரப்பில் அமைப்பதாக இருந்தால், வீடு கட்ட ஆரம்பிக்கும்போதே, தகுந்த பொறியாளரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.l நீச்சல் குளம் அமைத்தபிறகு, பராமரிப்பு மிக மிக அவசியம். தற்போது பராமரிப்பு சாதனங்கள் மற்றும் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வேதிப்பொருட்கள், மார்க்கெட்டில் எளிதில் கிடைக்கின்றன.l பில்ட்ரேசன் யூனிட் அமைத்து, தினமும் நீரை சுத்தப்படுத்துதல் அவசியம். குழந்தைகள் நீச்சல் பழகும்போது நமது கண்காணிப்பு முக்கியம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி