உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வடமாநில தொழிலாளர்கள் எப்போ வருவாரோ? தொழில்கள் பாதிப்பதாக குமுறல்

வடமாநில தொழிலாளர்கள் எப்போ வருவாரோ? தொழில்கள் பாதிப்பதாக குமுறல்

மேட்டுப்பாளையம்: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப இரு வாரங்கள் ஆகும் என்பதால் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 1.50 லட்சத்திற்கும் அதிகமான சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு உற்பத்தி பணிகளை தொய்வின்றி நகர்த்துவதில், வடமாநில தொழிலாளர்களின் பங்கு முக்கியமானது. சுமார் 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை கொண்டாட 50 சதவீதம் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இனியும் பணிக்கு திரும்பவில்லை. இதனால், நிறுவனங்களில் உற்பத்தி ஸ்தம்பிக்கும் அபாயம் உள்ளதாக, தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந் தொழில் முனைவோர் சங்க, மாவட்ட தலைவர் ஜேம்ஸ் தெரிவித்தார். அவர் நமது நிருபரிடம் கூறியதாவது: விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்ற வடமாநில தொழிலாளர்களில் 50 சதவீதம் பேர், அதாவது 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இனியும் வேலைக்கு திரும்பவில்லை. பணிக்கு திரும்ப குறைந்தது 15 முதல் 20 நாட்களாவது ஆகும். அதுவரை தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கும். பணிக்கு திரும்பிய பிறகு, விடுபட்ட இந்த உற்பத்தி பணி மீண்டும் செய்து முடிக்க ஒரு மாத காலமாகும். இது எங்களுக்கு பெரும் சிக்கலையும் சவாலையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பெற்ற ஜாப் ஆர்டர்களை முடித்து, உரிய நேரத்தில் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

kumar
நவ 11, 2026 10:56

டாஸ்மாக் சோம்பேறி தமிழனுக்கு வடக்கனை பிடிக்காதே


BALAJI
நவ 11, 2026 14:37

உன்னைய மாதிரி எப்பவும் டாஸ்மாக் லேயே இருந்த தமிழ்நாடு எப்படி வளரும்


VENKATASUBRAMANIAN
நவ 11, 2026 08:23

இங்கே வீரவசனம் பேசுபவர்களை வேலைக்கு வரச்சொல்லுங்கள்.இவர்களுத்தான் வட மாநில தொழிலாளர்கள் வேண்டாம் இந்தி வேண்டாம். அப்புறம் பேசுபவர்கள் வந்து வேலை பார்க்கட்டும். திருட்டு கும்பல்.