உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மனிதன் இருக்குமிடத்தில் அன்பு, பக்தி நிறைந்திருக்கும் 

மனிதன் இருக்குமிடத்தில் அன்பு, பக்தி நிறைந்திருக்கும் 

கோவை : ''மனிதன் எங்கெங்கு இருக்கிறானோ, அங்கெல்லாம் அன்பும், பக்தியும் நிறைந்திருக்கும்,'' என்று, ரமண சரணதீர்த்தர் நொச்சூர் சுவாமி கூறினார்.கோவை ராம்நகர் ஸ்ரீ ஐயப்ப பூஜா சங்கத்தில் புரட்டாசி மாத ஆன்மிக சொற்பொழிவு நேற்று நடந்தது. அதில் அருணாச்சல அனுபவம் குறித்து ரமண சரணதீர்த்தர் நொச்சூர் சுவாமி பேசியதாவது:நம்மில் பலர் துன்பம் என்ற சிறையிலிருக்கிறோம்; சிறையிலிருந்து விடுபட வழி கேட்பதில்லை. சிறையிலிருந்து விடுபடுவது தான் முக்தி. சூரிய ஒளியை அதிகாலை நேரத்தில் பறவைகள் உணர்ந்து எப்படி சப்தமிடுகின்றனவோ, முக்தியை குருவின் வாயிலாக பக்தியால் நாம் உணர்கிறோம்.பக்தி எப்படி ஆரம்பிக்கும் என்றால் ஆன்மிக சொற்பொழிவுகளையும், பக்தி பாசுரங்களையும், நாமசங்கீர்த்தனங்களையும் கேட்கும்போது நம் மனதில் பக்தி பிரவாகம் உருவாகும். வேதாந்தம் படிப்பதால் பக்தி ஏற்படாது, பகவத் குணங்களையும், நாமத்தையும் கேட்பதால் மட்டுமே பக்தி ஏற்படும்.மனிதன் எங்கெங்கு இருக்கிறானோ அங்கெல்லாம் அன்பும், பக்தியும் நிறைந்திருக்கும். நம் பாரத தேசத்தில் பக்தி மார்க்கம் பரவிக்கிடக்கிறது அதை ஒவ்வொருவரும் பயன்படுத்தி அவ்வழியில் வாழ்க்கையை தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை