உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அவுட்டுக்காய் பயன்படுத்தி காட்டுப்பன்றி வேட்டை

அவுட்டுக்காய் பயன்படுத்தி காட்டுப்பன்றி வேட்டை

கோவை: அவுட்டுக்காய் பயன்படுத்தி காட்டுப்பன்றியை வேட்டையாடிய, ஐந்து பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.கோவை மாவட்டத்தில், அவுட்டுக்காய் எனும் நாட்டு வெடிகுண்டு குறித்து, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில், மோப்ப நாய் உதவியுடன் தொடர் தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகள், வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் வனத்துறையினர், கடந்த சில தினங்களாக சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று தோலம்பாளையம் பகுதியில், வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வீடு ஒன்றில் காட்டுப்பன்றி இறைச்சி இருப்பது கண்டறியப்பட்டது. அதை கைப்பற்றிய வனத்துறையினர், அங்கிருந்த ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், அவர்கள் தோலம்பாளையம், நீலாம்பதியை சேர்ந்த கிருஷ்ணசாமி, மருதன், ரங்கசாமி, அப்பய்யன், வெள்ளிங்கிரி என்பதும், அவுட்டுக்காய் பயன்படுத்தி காட்டுப்பன்றியை வேட்டையாடியதும் தெரிந்தது. ஐந்து பேரையும் கைது செய்த வனத்துறையினர், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை