உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மலைப்பாதையில் வனவிலங்குகள்; கவனமாக பயணிக்க அட்வைஸ்

மலைப்பாதையில் வனவிலங்குகள்; கவனமாக பயணிக்க அட்வைஸ்

வால்பாறை; வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் வனவிலங்குகள் அதிகளவில் நடமாடுவதால், வாகன ஓட்டுநர்கள் கவனமாக செல்ல வேண்டும், என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.வால்பாறையில் கோடை மழைக்கு பின், வன வளம் மீண்டும் பசுமையாக மாறியதால், வனத்துறையினர் நிம்மதியடைந்துள்ளனர். இந்நிலையில், வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் குடிநீர் மற்றும் உணவு தேடி அதிகளவில் வனவிலங்குகள் ரோட்டை கடக்கின்றன.குறிப்பாக, ஆழியாறில் இருந்து வால்பாறை நகர் வரும் வழியில் வரையாடு, சிங்கவால்குரங்குகள், யானைகள், காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் நடமாடுகின்றன.கோடை விடுமுறை என்பதால், வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் வாகனங்களில் அதிகம் வரும் நிலையில், பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என, ஆழியாறு சோதனைச்சாவடியில் வனத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறை - ஆழியாறு ரோட்டில் கோடை மழைக்கு பின் வனவிலங்குகள் அதிகளவில் ரோட்டை ஒட்டியுள்ள பகுதியில் முகாமிடுகின்றன. சில நேரங்களில் வனவிலங்குகள் குடிநீர் தேவைக்காக ரோட்டை கடந்து செல்கின்றன.எனவே, வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர், வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் வாகனத்தை விட்டு கீழே இறங்கி, புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும். வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது. வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ