மேலும் செய்திகள்
டிஜிட்டல் சர்வே பணி; அதிகாரிகள் தீவிரம்
03-May-2025
வாகன விபத்தில் ஒருவர் காயம்
26-Apr-2025
கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு, கோதவாடி மாரியம்மன் கோவில் முன் மண்டபத்தை விரைவாக சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.கிணத்துக்கடவு, கோதவாடியில் உள்ள மாரியம்மன் கோவில், கடந்த, 1922ல் கட்டப்பட்டது. இந்த கோவிலில், 100 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் தற்போது வரை கும்பாபிஷேகம் நடக்கவில்லை. கோவிலுக்கு, 18 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், கோவில் பராமரிப்பு பணிகள் முறையாக செய்யப்படுவதில்லை.இதனால், கோவில் முன் மண்டபம் மேற்கூரை சரியும் நிலையில் இருந்ததால், அப்பகுதி மக்கள் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரியிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கையால் கோவிலின் மேற்கூரை அகற்றம் செய்யப்பட்டது.அதன் பின், ஒரு ஆண்டு நிறைவடைந்தும் இன்று வரை முன் மண்டப மேற்கூரை சீரமைப்பு பணிகள் நடக்கவில்லை.நலிவடைந்த கோவில்களை சரி செய்ய அரசு பட்டியல் தயார் செய்து நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில், கோதவாடி மாரியம்மன் கோவில் பெயர் சேர்க்கப்பட்டு, கோவில் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஆனால், தற்போது வரை கோவில் சீரமைப்பு பணிக்கு என எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. தற்போது கோடை காலம் நிறைவடையும் நிலையில் உள்ளது. தொடர்ந்து, மழை காலம் துவங்க இருப்பதால், உடனடியாக கோவில் முன் மண்டபம் பணிகளை துவங்க வேண்டும்.இல்லாவிட்டால், மேற்கூரை இல்லாத நிலையில் மழை பெய்யும் போது, சுவர்களில் மழை நீர் இறங்கி மேலும் சேதமடைய வாய்ப்புள்ளது. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.
03-May-2025
26-Apr-2025