மேலும் செய்திகள்
கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழப்பு
10-Sep-2025
கோவை; கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டராக இருந்தவர் பானுமதி,52; சில ஆண்டுகளுக்கு முன் விருதுநகரில் பணியாற்றியதால், வழக்கு தொடர்பாக கோர்ட்டில் சாட்சியளிக்க சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து பஸ்சில் புறப்பட்டு, அதிகாலை 4.30 மணிக்கு கோவைக்கு வந்தார். சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டில் இருந்து, அவரது மகன் பைக்கில் அழைத்துச் சென்றார். காமராஜர் ரோட்டில் சென்றபோது, பின்னால் வந்த வேன் அவர்களை முந்திச் செல்ல முயன்று, பைக்கில் மோதியது. இருவரும் தடுமாறி கீழே விழுந்ததில், இன்ஸ்பெக்டர் பானுமதி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். பானுமதி, சிங்காநல்லுார் பாரதிபுரத்தில் கணவர் ராதாகிருஷ்ணன், ஒரு மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இவரது சொந்த ஊர் விருதுநகர். பிரேத பரிசோதனைக்குப் பின், நஞ்சுண்டாபுரத்தில் உள்ள மின் மயானத்தில், உடல் தகனம் செய்யப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
10-Sep-2025