உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு ரூ.12.77 லட்சம் இழந்த பெண்

அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு ரூ.12.77 லட்சம் இழந்த பெண்

கோவை: ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் தருவதாக கூறியதை நம்பி, கோவையை சேர்ந்த பெண் ரூ. 12.77 லட்சம் பணத்தை இழந்தார்.கோவை, ரத்தினபுரியை சேர்ந்தவர் அஸ்வினி, 26; தனியார் நிறுவன ஊழியர். கடந்த ஆண்டு மே மாதம் இவருக்கு, ஒரு 'வாட்ஸ் ஆப்' அழைப்பு வந்தது.அதில் பேசிய நபர், 'கோல்ட்மேன் சாக்ஸ்' வங்கியில், ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்தார். முதலீடு செய்வதற்கான செயலியையும் அனுப்பியுள்ளனர்.இதை நம்பிய அஸ்வினி, அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, அதில், 19 தவணைகளாக ரூ. 13 லட்சத்து 77 ஆயிரத்தை முதலீடு செய்தார். அதிலிருந்து அவருக்கு, ரூ.1 லட்சம் லாபம் கிடைத்துள்ளது. அதை அஸ்வினி வங்கி கணக்குக்கு மாற்றினார்.அதன் பின், செயலியில் லாபம் கிடைக்கவில்லை. இதனால் முதலீட்டு பணத்தை திரும்ப எடுக்க அவர் முயற்சித்தார். அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை.அஸ்வினியிடம் பேசிய நபரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, மொபைல் எண் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அஸ்வினி, மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ