உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தரம் குறைந்த நகை விற்றதால் பெண்ணுக்கு இழப்பீடு தர உத்தரவு

தரம் குறைந்த நகை விற்றதால் பெண்ணுக்கு இழப்பீடு தர உத்தரவு

கோவை; தரம் குறைந்த நகை விற்றதால், பெண்ணுக்கு இழப்பீடு வழங்க, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. பேரூர், செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வி என்பவர், பெரிய கடை வீதி எம்.எஸ்.சுந்தரி ஜுவல்லரியில் நகை சீட்டுக்கு மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தார். மொத்தம் செலுத்திய, 19 ஆயிரத்து, 800 ரூபாய்க்கு, அதே கடையில் நான்கு கிராம் மோதிரம் வாங்கினார். 916 தரம் கொண்டது என நகைக்கடையினர் தெரிவித்தனர். அவசர செலவுக்கு, அடகு கடையில், அந்த மோதிரத்தை அடகு வைக்கச் சென்றபோது, மோதிரம் 916 தரம் கொண்டது இல்லை என்று தெரிவித்தனர். பரிசோதித்தபோது, போலியான 916 தர முத்திரை குத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. மோதிரம் வாங்கிய அதே கடைக்குச் சென்று, 916 தர மோதிரத்தை மாற்றித்தருமாறு கேட்டபோது, மறுத்தனர். இழப்பீடு வழங்கக்கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'மோதிரத்தின் தற்போதைய சந்தை மதிப்புக்கு ஏற்றபடி, 916 தரம் கொண்ட நகையை மனுதாரருக்கு வழங்குவதோடு, மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 7,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை