உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானை தாக்கி பெண் படுகாயம்

யானை தாக்கி பெண் படுகாயம்

தொண்டாமுத்துார்; விராலியூரில், அதிகாலையில் காலைக்கடன் கழிக்கசென்றபோது, ஒற்றைக்காட்டு யானை தாக்கியதில் பெண் படுகாயம் அடைந்தார். போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட விராலியூர் வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு, ஒற்றைக் காட்டு யானை வெளியேவந்தது. விராலியூர், இந்திரா காலனியை சேர்ந்தவர் ரத்னா, 53. கூலித்தொழிலாளி. இவர், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, வீட்டின் அருகே உள்ள காலியிடத்தில், காலைக்கடன் கழிக்க சென்றுள்ளார். அங்கிருந்த ஒற்றை காட்டு யானை, ரத்னாவை, தும்பிக்கையால் துாக்கி வீசியது. இதில், ரத்னாவிற்கு, நெற்றி, கை, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள், ரத்னாவை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை