வாகன விபத்தில் பெண் படுகாயம்
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி அருகே, கார் மோதியதில், பைக்கில் சென்ற பெண் காயம் அடைந்தார்.கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியை சேர்ந்தவர் விநாயகசுந்தரம், 61, சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவர், மனைவி சாந்தி, 56, உடன் கொண்டம்பட்டியில் உள்ள தனியார் கம்பெனி அருகே பைக்கில் சென்றார்.அப்போது, தண்டபாணி என்பவர் ஓட்டி வந்த கார், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், சாந்தி படுகாயமடைந்தார். அவரை மீட்ட மக்கள், ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.