உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்டுமாடு தாக்கி பெண் படுகாயம்

காட்டுமாடு தாக்கி பெண் படுகாயம்

வால்பாறை; வால்பாறை அடுத்துள்ளது கேரள மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட். இங்குள்ள அடிச்சல்தொட்டி காலனியை சேர்ந்த பழங்குடியின பெண் யசோதா, 40. அருகில் உள்ள வனப்பகுதியில் விறகு தேட சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த காட்டுமாடு, அவரை தாக்கியது. இதில் அவரது வலது தொடையில் ஆழமான காயம் ஏற்பட்டது. உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு, கேரள மாநிலம் சாலக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக, திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து மளுக்கப்பாறை வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ