உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆன்லைன் முதலீடு ஆசை காட்டி ரூ.19 லட்சம் சுருட்டிய பெண்

ஆன்லைன் முதலீடு ஆசை காட்டி ரூ.19 லட்சம் சுருட்டிய பெண்

கோவை; ஆன்லைனின் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.19 லட்சம் மோசடி செய்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கணபதியை சேர்ந்த, 53 வயதான நபர், அதே பகுதியில் கிரைண்டர் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் 'யூ டியூப்பில்' வீடியோ பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு விளம்பரம் வந்துள்ளது. அதில் இருந்த 'லிங்க்'ஐ கிளிக் செய்தபோது, அவரின் எண் 'கேபிட்டல் திங்க் டாங்க்' என்ற 'வாட்ஸ் அப்' குழுவில் இணைக்கப்பட்டது.'வாட்ஸ் அப்' குழுவில் இருந்து நேகா அகர்வால் என்ற நபர் கிரைண்டர் கம்பெனி உரிமையாளரிடம் பேசினார். அப்போது, அவர் பிரபல நிறுவனங்களின் ஆரம்ப பொது வழங்கல் திட்டத்தின் (ஐ.பி.ஓ.,) கீழ் பங்குகளை வாங்கி விற்பனை செய்து வருவதாகவும், அதில் ஆன்லைன் வாயிலாக முதலீடு செய்தால், அதிக லாபம் ஈட்டி தருவதாகவும் தெரிவித்தார்.இதை நம்பி, பிப்.,24 முதல் மே, 8 வரை, 12 தவணைகளில் ரூ. 19.09 லட்சம் பணத்தை முதலீடு செய்தார். அதன் பின், நேகா அகர்வால் மாயமாகிவிட்டார். அவரை தொடர்பு கொள்ள முயன்றும் பயனில்லை. இதனால், கிரைண்டர் நிறுவன உரிமையாளர் கோவை மாநகர போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி