மேலும் செய்திகள்
'கிரிஷ் அதலெடிக்-25' பிப்., 5க்குள் முன்பதிவு
24-Jan-2025
கோவை; நிர்மலா கல்லுாரியில் நடந்த விளையாட்டு விழாவில், 'ஹோப்' அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றது.நிர்மலா மகளிர் கல்லுாரியின் உடற்கல்வித் துறை சார்பில், 73வது விளையாட்டு விழா நடந்தது. இதில், பெயித், ஹோப், ஜாய், மெர்சி என நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு, மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.வாலிபால், எறிபந்து, கபடி, 100 மீ., 400 மீ., 3,000 மீ., ஓட்டம்நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், 400 மீ., தொடர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் இடம்பெற்றன.தடகள போட்டிகளில், இளங்கலை ஆங்கிலத் துறை மூன்றாம் ஆண்டு மாணவி தனமோல் தனிநபர் சாம்பியன்ஷிப் வென்றார்.ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும், 'ஹோப்' அணி வென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு, கல்லுாரி செயலாளர் குழந்தை தெரஸ், முதல்வர் மேரி பபியோலா ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
24-Jan-2025