உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  எஸ்.எஸ்.கோவில் வீதி சந்திப்பில் தரைப்பாலம் கட்டும் பணி தீவிரம்

 எஸ்.எஸ்.கோவில் வீதி சந்திப்பில் தரைப்பாலம் கட்டும் பணி தீவிரம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி எஸ்.எஸ்.கோவில் வீதியில் புதிய தரை மட்ட பாலம் கட்டும் பணி நடக்கிறது. பொள்ளாச்சி, ராஜாமில் ரோடு பகுதியையொட்டி வசிக்கும் குடியிருப்பு பகுதி மக்கள், எஸ்.எஸ்.கோவில் வீதி வழியாக கோவில்கள், கடைவீதிக்கு செல்ல பயன்படுத்தி வந்தனர். இங்கு இருந்த பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் கட்டும் பணிக்காக குழி தோண்டப்பட்டது. இரு மாதங்களாகியும் பணிகள் துவங்கப்படாமல் இருந்தது. இவ்வழியாக செல்ல முடியாததால் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், குழியையொட்டி பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்படாமல் உள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருந்தது. இது குறித்து, கடந்த, 6ம் தேதி 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன், ஆய்வு செய்து, பாலப்பணிகளை வேகப்படுத்த நகராட்சி கமிஷனரிடம் கூறினார். இந்நிலையில், பாலம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் கூறுகையில், 'பாலம் கட்டும் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது. இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்