குடும்பத்தை பிரிந்ததால் தொழிலாளி தற்கொலை
பொள்ளாச்சி; திண்டுக்கல்லை சேர்ந்தவர் ஜோசப் பிரவீன்குமார்,42; கூலித்தொழிலாளி. இவர், குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால், கணவன், மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.இதனால், கடந்த ஐந்தாண்டுக்கு முன், மனைவியை பிரித்து, பொள்ளாச்சி வடுகபாளையம் புதுக்காலனியை சேர்ந்த சகோதரி ஸ்டீலா,46, வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.மனைவி மற்றும் மகன்களை பிரித்ததால், மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் அவரது சகோதரி வேலைக்கு சென்ற போது, வீட்டில் தனிமையில் இருந்த ஜோசப் பிரவீன்குமார் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.