உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாய்ந்த மின்கம்பத்தால் தொழிலாளர்கள் அச்சம்

சாய்ந்த மின்கம்பத்தால் தொழிலாளர்கள் அச்சம்

வால்பாறை; வால்பாறை, நடுமலை தெற்கு டிவிஷன் எஸ்டேட்டில், நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இங்குள்ள, 6ம் நெம்பர் தேயிலை காட்டில் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.தொழிலாளர்கள் கூறியதாவது:தேயிலை எஸ்டேட்டின் மத்தியில், உயர் மின்அழுத்த மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. வால்பாறையில் தற்போது பலத்த காற்று வீசும் நிலையில், மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இதனால், தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.ஏற்கனவே வனவிலங்குகள் நடமாட்டத்தால் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், மின்கம்பம் விழும் நிலையில் உள்ளதால், நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். மின்கம்பம் சாய்ந்து அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ