| ADDED : மார் 08, 2024 01:22 AM
கோவை;உலக குளுக்கோமா (கண் அழுத்த நோய்) வாரத்தையொட்டி தி ஐ பவுண்டேஷன் சார்பில் இலவச பரிசோதனை செய்யப்படுகிறது.நாட்டில் 3 - 5 சதவீதம் மக்களுக்கு கண் அழுத்த நோய் இருப்பதும், அதில் 90 சதவீதம் பேர் நோய் பாதிப்பை கண்டறியாமல் இருப்பதும் ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் குளுக்கோமா வாரம் அனுசரிக்கப்படுகிறது.இந்தாண்டு, மார்ச் 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்து தி ஐ பவுண்டேஷன் தலைவர், ராமமூர்த்தி கூறுகையில், ''நாங்கள் மார்ச் 11 முதல் 16ம் தேதி வரை உலக குளுக்கோமா வாரத்தை ஒட்டி, குளுக்கோமாவை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, கண் பார்வை இழப்பை தடுக்க இலவச கண் அழுத்த நோய் (குளுக்கோமா) பரிசோதனை மேற்கொள்கிறோம். இந்நோயை கண்டறிய செய்யப்படும் பரிசோதனை, சிகிச்சை, அறுவைசிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை வழங்கப்படுகிறது,'' என்றார்.