உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மறைந்த முன்னோரை நினைத்து கல்லறை திருநாளில் வழிபாடு

மறைந்த முன்னோரை நினைத்து கல்லறை திருநாளில் வழிபாடு

கோவை: கல்லறை திருநாளை யொட்டி, நேற்று கோவை தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கல்லறை தோட்டங்களுக்கு சென்ற கிறிஸ்தவர்கள், முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். சிலர் இறந்த தங்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவு படைத்தனர். ஏழைகளுக்கு உணவு வழங்கினர். முன்னோர்களின் ஆன்மா இளைப்பாறுதலுக்காக, கோவை திருச்சி சாலை, அரசு மருத்துவமனைக்கு எதிரிலுள்ள கல்லறை தோட்டம்,சுங்கம் நிர்மலா கல்லுாரிக்கு அருகே உள்ள கல்லறை தோட்டங்களில் திருப்பலி நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி