உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீசாருக்கு யோகா பயிற்சி

போலீசாருக்கு யோகா பயிற்சி

கோவை :சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவையில், போலீசார் ஆசனங்கள் செய்தனர்.நாடு முழுவதும் நேற்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவையில் தனியார் அமைப்பு சார்பில், போலீசாருக்கு யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பி.ஆர்.எஸ்., பயிற்சி மையத்தில் நடந்த யோகா பயிற்சியில், 500க்கும் மேற்பட்ட மாநகர போலீசார் யோகா பயிற்சி பெற்றனர்.போலீசாருக்கு யோகா செய்வதன் நன்மைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், ஆயுதப்படை துணை கமிஷனர் ராஜ் கண்ணா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை