உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வேளாண் இடுபொருள் ஆன்லைனில் வாங்கலாம்

 வேளாண் இடுபொருள் ஆன்லைனில் வாங்கலாம்

பெ.நா.பாளையம், உழவர்கள் சில நேரம் தரமான இடுபொருட்களை பெற, அதிக நேரம் மற்றும் செலவு ஆவதை தடுக்க, விதைகள் மற்றும் இடுபொருட்களை உழவர்களின் வீடுகளுக்கே, நேரடியாக ஆன்லைன் வழியாக விற்கும் இணையதளத்தை, வேளாண் பல்கலை உருவாக்கி உள்ளது. TNAU அக்ரிகார்ட் (www.tnagricart.com) என்ற இணையதளத்தில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் பருவங்கள் தொடங்கும் முன், வேண்டிய பயிர் ரகங்களின் விதைகள் மற்றும் வேளாண் இடுபொருட்கள், குறிப்பாக, உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், பயிர் பூஸ்டர்கள் போன்றவை ஆன்லைன் வாயிலாக வாங்கி, பருவத்தில் பயிர் செய்து, உழவர்கள் பயனடையலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இணையதளத்தை அனைத்து விவசாயிகளும், சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள பெரியநாயக்கன்பாளையம் வேளாண்துறை, விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ