உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுங்கத்தில் இனி தாறுமாறு முடியாது வந்தாச்சு நவீன கண்காணிப்பு அறை!

சுங்கத்தில் இனி தாறுமாறு முடியாது வந்தாச்சு நவீன கண்காணிப்பு அறை!

கோவை;விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்காணிக்க, ரூ.22 லட்சம் மதிப்பிலான கண்காணிப்பு அறையை, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.சுங்கம் சந்திப்பில், ரூ.22 லட்சம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்கள், பாதசாரிகள் ரோட்டை கடக்க, அவர்களே இயக்கும் சிக்னல்கள் அடங்கிய, கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஏ.சி., மின்விசிறி, விளக்குகள், ஒலிபெருக்கி, மைக்,14 அதிநவீன கேமராக்கள், கண்காணிக்கும் திரை உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கண்காணிப்பு அறையை நேற்று துவக்கி வைத்தார்.புதிய கண்காணிப்பு அறை வாயிலாக, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை துல்லியமாக படம் பிடிக்கவும், இப்பகுதியில் நடக்கும் குற்றங்களை கண்டறியவும் முடியும். இக்கேமராக்கள், மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை, தேசிய தகவல் மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், வாகன உரிமையாளரின் பெயர் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு, விதிமீறல்கள் குறித்த தகவல்கள், அவர்களது மொபைல்போன் எண்ணுக்கு, குறுந்தகவலாக அனுப்பப்படும்.துவக்க நிகழ்ச்சியில், கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ராஜராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி