மேலும் செய்திகள்
மார்கழியில் சோளம் சாகுபடி வேளாண்துறை அறிவுரை
01-Jan-2025
பெ.நா.பாளையம்; தை பிறந்தால் எள் விதைக்கலாம் என, வேளாண் துறை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.கோவை மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக, 4,327 எக்டரில் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில், நிலக்கடலை, 4054 எக்டர், எள், 254 எக்டர், ஆமணக்கு, 19 எக்டரும் சாகுபடி செய்யப்படுகிறது.இறவை சாகுபடியில் தை பட்டத்தில் எண்ணெய் வித்துக்களின் அரசியான எள் சாகுபடி செய்யலாம். எள் குறைந்த வயதுடையது. அதாவது, 90 நாட்கள் மட்டுமே. அதிக நீர் தேவை இல்லை. 250 மி.மீ., அளவு மட்டுமே நீர் தேவை உள்ளது. குறைந்த மண்வளத்திலும் சாகுபடி செய்யலாம். தை பட்டத்துக்கு ஏற்ற ரகங்கள் வி.ஆர்.ஐ., 4, 2022ம் ஆண்டு வெளியிடப்பட்ட உயர் விளைச்சல் ரகமாகும்.தை, மாசி, சித்திரை பட்டங்களுக்கு ஏற்றது. விதைக்கு முன் விதையுடன் திரவ அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் துத்தநாகம் கரைக்கும் பாக்டீரியா தலா, 50 மில்லியும், ட்ரைகோ டெர்மா விரிடியும் கலந்து மணல் சேர்த்து மேலாக விதைக்க வேண்டும்.இலைகளில் எண்ணெய் சத்து, பச்சையம் அதிகரிக்க ஏக்கருக்கு, 2 கிலோ மாங்கனீசு சல்பேட் நுண்சத்திணை மணலுடன் கலந்து மேலாக இடவேண்டும். மேலும், விபரங்களுக்கு அந்தந்த பகுதி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என, கோவை வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி தெரிவித்தார்.
01-Jan-2025