பொள்ளாச்சி : 'தி.மு.க., போன்று போலி வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்ற மாட்டோம்; மக்களிடம் பெறும் மனுக்களை, வாக்குறுதியாக அறிவித்து நிறைவேற்றுவோம்,'' என, பா.ஜ., மாவட்ட தலைவர் வசந்தராஜன் தெரிவித்தார்.பொள்ளாச்சி பா.ஜ., கட்சி அலுவலகத்தில், 'உங்கள் விருப்பம், எங்களது உத்ரவாதம்' என்ற தலைப்பில், 'வேண்டும் மோடி, மீண்டும் மோடி' என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பெட்டியுடன் சென்று, மக்களிடம் மனுக்களை பெறும் திட்டம் அறிமுக கூட்டம் நடந்தது.மாவட்ட பார்வையாளர் மோகன் மந்திராச்சலம், பொதுச் செயலாளர் துரை, ஊடக பிரிவு மாவட்ட தலைவர் இளங்கோ மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.மாவட்ட தலைவர் வசந்தராஜன் கூறியதாவது:பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், மக்களின் கோரிக்ககைளை பெற்று அதை தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும். ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் இந்த பெட்டி வைத்து மனுக்கள் பெறப்பட உள்ளது.அவை வெறும் தேர்தல் வாக்குறுதியாக மட்டுமில்லாமல், அதை நிறைவேற்றப்படும் என்ற பிரதமர் மோடியின் கியாராண்டியாக செயல்படுத்துகிறோம். ஆனைமலையாறு - நல்லாறு திட்டம், ரயில்கள் இயக்கம், ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் என, நீண்ட கால பிரச்னைகள் கூட தீர்க்கப்படாமல் உள்ளன.தென்னை விவசாயம் பாதிப்பு உள்ளிட்டபிரச்னைகள் குறித்து மக்கள் தெரிவித்தனர்.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதியை கூறி ஏமாற்றியது.மதுக்கடைகள் மூடப்படும் என எதிர்பார்த்த நிலையில் புதியதாக, எப்.எல்.,2 மது பார்கள் துவங்க அனுமதி வழங்குவது இந்த ஆட்சியின் சாதனையாக உள்ளது.வரி உயர்வு, மின்கட்டணம் உயர்வால் மக்கள் சிரமப்படுகின்றனர். தி.மு.க., போன்று இல்லாமல், பா.ஜ., வாக்குறுதிகளை நிறைவேற்றும். இவ்வாறு, அவர் கூறினார். மனுவோடு துவக்கம்
பா.ஜ.,வின் மனுக்கள் பெறும் பெட்டியில், தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன், மனுவை செலுத்தி, தென்னை நார் தொழிலை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்தார். மேலும், தென்னை நார் ஏற்றுமதி செய்வதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என, தென்னை நார் உற்பத்தியாளர் சார்பில் மனு அளிக்கப்பட்டது.