உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆழியாறு ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

ஆழியாறு ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

ஆனைமலை; ஆனைமலை நரசிம்ம நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி விஜயன்,34. கோவை கல்லுக்குழியைச் சேர்ந்த உறவினர் லோகு,30 என்பவர், ஒரு வாரமாக அவரது வீட்டில் தங்கியுள்ளார். நேற்று மதியம் விஜயன், லோகு மது குடித்துவிட்டு ஆனைமலை ஆழியாறு ஆற்றில் குளித்துக்கொண்டு இருக்கும் போது, விஜயன் ஆழமான பகுதியில் நிலை தடுமாறி ஆற்றில் தத்தளித்துக்கொண்டு இருந்தார். அப்போது, லோகு சப்தம் போட்டார்.பின்னர், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த ஆனைமலை போலீசார், தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி விஜயன் உடலை மீட்டனர். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !